TNPSC Group 2 Maths Important Question and Answer – 6

Aptitude TNPSC

TNPSC Group 2 Important Tips for Maths – 6

TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள்

TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும்.

இதனை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

பொது அறிவு முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.

💠 இரு குழாய்கள் ஒரே நேரத்தில் வேலை செய்யும் சமயத்தில் தொட்டியானது 12 மணி நேரத்தில் நிரப்பப்படுகிறது. முதல் குழாயானது தொட்டியினை மற்றொரு குழாயுடன் ஒப்பிடுகையில் 10 மணி நேரம் முன்னதாக நிரப்புகிறது. ஆதலால் இரண்டாவது குழாயால் எத்தனை மணி நேரத்தில் தொட்டியினை நிரப்ப முடியும்?

விடை : 30 மணி நேரம்

💠 விளக்கம் :
முதல் குழாய் தொட்டியினை நிரப்ப எடுத்துக்கொள்ளும் நேரம் = X மணி நேரம்
இரண்டாவது குழாய் தொட்டியினை நிரப்ப எடுத்துக்கொள்ளும் நேரம் = (X + 10) மணி நேரம்
[ (1/X) + (1/(X + 10)) ] = 1/12
[ (X + 10 + X) / (X (X + 10)) ] = 1/12
x2 – 14x – 120 = 0
(X – 20) * (X + 6) = 0
X = 20
இரண்டாவது குழாய் தொட்டியினை நிரப்ப எடுத்துக்கொள்ளும் நேரம் = 20 + 10 = 30 மணி நேரம்

💠 இரு குழாய்கள் ஒரு தொட்டியினை 14 மணி நேரம், 16 மணி நேரம் என்ற வீதத்தில் நிரப்புகின்றன. இரு குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்படுகிறது மற்றும் தொட்டியின் அடிப்பகுதியில் ஏற்பட்ட துளை காரணமாக அவற்றை நிரப்ப 32 நிமிடம் அதிகமாக தேவைப்படுகிறது. ஆகவே, தொட்டியானது முழுவதும் நிரம்பியிருக்குமேயானால், அதனை சிறு துளை வழியாக மட்டும் காலியாக்க எத்தனை மணி நேரம் தேவைப்படுகிறது?

விடை : 112 மணி நேரம்

💠 விளக்கம் :
இரு குழாய்களால் தொட்டியினை நிரப்ப செய்யப்படும் வேலை = [ (1/14) + (1/16) ]
= 15/112
இரு குழாய்களால் தொட்டியினை நிரப்ப எடுத்துக்கொள்ளும் நேரம் = 112/15 மணி நேரம் = 7 மணி 28 நிமிடம்
அடிப்பகுதியில் ஏற்பட்ட துளையினால் தொட்டி நிரம்ப ஆகும் நேரம் = 7 மணி 28 நிமிடம் + 32 நிமிடம் 8 மணி நேரம்
இரு குழாய்கள் மற்றும் தொட்டியின் அடிப்பகுதியில் ஏற்பட்ட துளை ஆகியவற்றால் ஒரு மணி நேரத்தில் செய்யபடும் வேலை = 1/8
தொட்டியின் அடிப்பகுதியில் ஏற்பட்ட துளையினால் ஒரு மணிநேரத்தில் செய்யப்படும் வேலை = [ (15/112) – (1/8) ] = 1/112
தொட்டியின் அடிப்பகுதியில் ஏற்பட்ட துளையினால் தொட்டியை காலியாக்க 112 மணி நேரம் தேவைப்படும்.

💠 இராசு 36,000க்கு ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி, அதன் தோற்றப் பொலிவு நன்கு அமையவும் மேலும் நன்முறையில் இயங்கவும் சில இதர பாகங்களைப் பொருத்தினார். பின்பு அம்மோட்டார் சைக்கிளை 44,000க்கு 10% இலாபத்தில் விற்கின்றார் எனில் இதர பாகங்கள் வாங்க எவ்வளவு செலவு செய்தார்?

விடை : ரூ.4000

💠 விளக்கம் :
அடக்கவிலை ரூ.100 என்க
இலாபம் = 10%, விற்பனை விலை = ரூ.110
விற்பனை விலை ரூ.110 எனில் அடக்க விலை ரூ.100
விற்பனை விலை ரூ.44,000 எனில் அடக்க விலை = 44000 X 100 / 110
= ரூ.40,000
மொத்த செலவினங்கள் = 40,000 – 36,000 = ரூ.4000
இதுபோன்ற மேலும் பல பயனுள்ள பொது அறிவு மாதிரி வினா – விடைகளை இலவசமாக PDF வடிவில் டவுன்லோட் செய்ய- இங்கே கிளிக் செய்யுங்கள்!


🏆🏆🏆TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா - விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்! 🏆🏆🏆

☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.