TNPSC Group 2 Maths Important Question and Answer – 4

Aptitude TNPSC

TNPSC Group 2 Important Tips for Maths – 3

TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா விடைகள்

TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா – விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா-விடைகள் நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்விற்கு மிகவும் பயனுள்ளதாகவும், முழுமையான மதிப்பெண்களை பெறுவதற்கும் மிக உதவியாக இருக்கும்.

இதனை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

பொது அறிவு முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.

💠. ஓர் ஆடையின் விலை ரூ. 2100 லிருந்து ரூ. 2520 ஆக அதிகரிக்கின்றது எனில், அதிகரிப்பு சதவீதத்தைக் காண்க.

விடை : 20%

விளக்கம் :
முதலில், ஆடையின் விலை = ரூ. 2100
ஆடையின் இப்போதைய விலை = ரூ. 2520
விலையில் அதிகரிப்பு = 2520 – 2100
= ரூ. 420
அதிகரிப்பு சதவீதம் = (அதிகரித்த தொகை / முதல் தொகை) * 100
= ( 420 / 2100 ) * 100
= 0.2 * 100
அதிகரிப்பு சதவீதம் = 20%

2. இரண்டு புடவைகள், 4 சட்டைகளின் விலை ரூ. 1600. அதே விலையில் ஒருவர் ஒரு புடவையையும், 6 சட்டைகளையும் வாங்குகிறார் எனில், 12 சட்டைகள் வாங்க எவ்வளவு தொகை தேவைப்படும்?

விடை : ரூ. 2400

விளக்கம் :
புடவைகளின் விலையை X எனவும், சட்டைகளின் விலையை Y எனவும் கொள்க.
2X + 4Y = 1600 —— (1)
X + 6Y = 1600 —— (2)
(1) – (2) * 2
2X + 4Y – 2X – 12Y = 1600 – 3200
-8Y = – 1600
Y = 200
Y யை (1) ல் பிரதியிட,
2X + 4 (200) = 1600
X = 400
ஆகவே 12 சட்டைகளின் விலை = 12 * 200 = ரூ. 2400

3. ஒரு பழமுதிர்ச்சோலையில் 9 ஆரஞ்சுகளின் விலை 5 ஆப்பிள்களின் விலைக்கும், 5 ஆப்பிள்களின் விலையானது 3 மாம்பழங்களின் விலைக்கும், 4 மாம்பழங்களின் விலை 9 எலுமிச்சைகளின் விலைக்கு சமம் ஆகும். ஆகவே, 3 எலுமிச்சைகளின் விலை ரூ. 4.80 எனில், ஒரு ஆரஞ்சின் விலையைக் காண்க.

விடை : ரூ. 1.20

விளக்கம் :
4 மாம்பழங்களின் எண்ணிக்கை = 9 எலுமிச்சைகளின் எண்ணிக்கை
= [ (4.80 / 3) * 9 ] = ரூ. 14.40
ஒரு மாம்பழங்களின் எண்ணிக்கை = 14.40 / 4 = ரூ. 3.60
5 ஆப்பிள் = 3 மாம்பழங்களின் விலை = 3.60 * 3
= ரூ. 10.80
9 ஆரஞ்சுகளின் எண்ணிக்கை = 5 ஆப்பிள்களின் எண்ணிக்கைகளின் விலை = ரூ. 10.80
ஒரு ஆரஞ்சின் விலை = Rs. (10.80 / 9) = ரூ. 1.20

இதுபோன்ற மேலும் பல பயனுள்ள பொது அறிவு மாதிரி வினா – விடைகளை இலவசமாக PDF வடிவில் டவுன்லோட் செய்ய- இங்கே கிளிக் செய்யுங்கள்!


🏆🏆🏆TNPSC குரூப் 2 பொது அறிவு மாதிரி வினா - விடைகளை PDF வடிவில் டவுன்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்! 🏆🏆🏆

☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

☀பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.