அகில் மரம் !!

VIVASAYAM


அகில் மரம் !!

கடந்த சில வாரங்களாக பார்த்துவரும் மரங்களை தொடர்ந்து அகில் என்னும் மரத்தை பற்றி இங்கு பார்ப்போம். அகில் மரம் தெற்கு ஆசியாவை தாயகமாக கொண்டது எனக்கூறலாம்.

இந்த மரத்திற்கு அகலி சந்தனம், அக்காலி சந்தனம், அகரு, அகர், கிருமிஜா, கிரிம்ஜக்தா, அனர்யகா, விஸ்வரூபகம், பிரவரா, ஜாங்ககம், ஷ;ரெக்டா வ்ருக்ஷh, ராஜர்கா, வம்ஷpகா, அகர்வுட், அலோஸ்வுட், ஈகிள்வுட் என பலமொழி பெயர்கள் உள்ளன.

தமிழ் மொழியில் அகில் மரத்தை குறிப்பிட 115 பெயர்கள் உள்ளன என கூறப்படுகிறது.

அனைத்துவிதமான மருத்துவத்திலும் இந்த அகில் பொருட்கள் மருந்துகளாக பயன்படுகின்றன.

இந்த மரம் கல்லீரல் சம்மந்தமான நோய்கள், காது மூக்கு தொண்டை தொடர்பான நோய்கள், ஆஸ்துமா மற்றும் இருமல் போன்ற நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக அகில் மரம் அகரு என்றே அழைக்கப்படுகிறது.

இதில் 3 வகையான மரங்கள் உள்ளன. அவை கிருஷ;ண அகரு, கஷ;ட அகரு மற்றும் மங்களயா அகரு என்பவையாகும்.

அகில் மரத்திலிருந்து எண்ணெயும் எடுக்கப்படுகிறது.

இந்த மரத்தை அம்ப்ரோசியா என்னும் வண்டுகள் அதிகம் தாக்குகின்றன. இதற்கு அகில் மரத்தின் பிசின்தான் பாதுகாப்பாக விளங்குகிறது.

அகில் கட்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் விட்டு நன்கு சுண்டக்காய்ச்சி அதை குடித்துவர பித்தம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

அகில் கட்டையை நன்றாகக் கொளுத்தினால் உண்டாகும் புகையை முக்கு மற்றும் வாய் வழியாக உள்ளுக்குள் இழுப்பதால் கல்லீரல் தொடர்பான வியாதிகள் குணமாகிவிடும்.

வாந்தி ஏற்படும் பொழுது இவ்வாறு புகை பிடித்தால் வாந்தி நின்றுவிடும்.

அகில் கட்டயைக் கொண்டு ஒரு தைலம் தயாரிக்கலாம். இந்தத் தைலம் மூக்கு, தொண்டை, காது போன்ற உறுப்புக்களில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.