ஜமுனாபாரி மற்றும் போயர் ஆடு வளர்ப்பு !!

VIVASAYAM


ஜமுனாபாரி மற்றும் போயர் ஆடு வளர்ப்பு !!

விவசாயத்தில் ஆடு வளர்ப்பு என்பது மிகவும் லாபகரமான ஒன்றாக உள்ளது. அதில் ஒரு இனமான ஜமுனாபாரி மற்றும் போயர் ஆடு பற்றி இங்கு பார்ப்போம்.

ஜமுனாபாரி ஆடு :

ஜமுனாபாரி ஆடு அழகான தோற்றன் கொண்டது. இதில் ஆண் ஆடுகள் 5 அடி உயரமும், பெண் ஆடுகள் 4 அடி உயரமும் வளடும்.

இந்த ஆட்டின் பால் அதிக புரதச்சத்து கொண்டது. இந்த பாலை குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

ஜமுனாபாரி ஆடுகள் ஒரு ஈத்துக்கு 3 குட்டிகள் வரை ஈனும் தன்மை கொண்டது.

இந்த ஆடுகள் வெள்ளை நிறத்திலும், கழுத்து மற்றும் தலைப்பகுதி பழுப்பு நிறமாகவும் காணப்படும்.

அனைத்து இன ஆடுகளை ஒப்பிடும் போது நீண்ட கால்களை கொண்டிருக்கும்.

போயர் ஆடு :

போயர் ஆட்டின் தாயகமாக தென்னாப்பிரிக்கா விளங்குகிறது. இந்த ஆடுகள் பெரும்பாலும் இறச்சிக்காக வளர்க்கப்படுகின்றன.

இந்த ஆடுகளின் வளர்ச்சி மிகவும் வியக்கத்தக்கதாக இருக்கும்.

ஆண் ஆடுகள் 140 கிலோ வரை வளரக்கூடியதாகும். மேலும் இந்த ஆடுகள் கடும் வெயில் மற்றும் மழையை தாங்கும் சக்தி கொண்டதாகும்.

இட வசதி :

முதலில் ஆடுகளுக்கு ஏற்ப இடத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒரு ஆட்டிற்கு, சராசரியாக 20 சதுர அடி இடம் இருத்தல் நல்லது.

பொதுவாகக் கொட்டிலின் அகலம் 25 அடி மற்றும் தேவையான அளவுக்கு நீளத்தை அமைத்து கொள்ளலாம்.

மேலும் ஆடுகளுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் தீவனவசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

தீவன மேலாண்மை :

வேலிமசால், முயல்மசால், கிளரிசீடியா, சவுண்டல் போன்ற தீவனங்களில் 60 சதவிகிதமும், கோ-4, கோ-3, கோ.எஃப்.எஸ்-29 போன்ற தீவனங்களில் 40 சதவிகிதமும் இருக்குமாறு தீவனம் அளித்தல் சிறந்தது.

20 நாள் குட்டிக்கு, ஒரு நாளைக்கு அரை கிலோ அளவில் பசுந்தீவனம் கொடுக்கலாம்.

3 மாதமான குட்டிகளுக்கு ஒரு நாளைக்கு 3 கிலோ வரை பசுந்தீவனமும், 100 கிராம் அடர் தீவனமும் கொடுக்கலாம்.

3 மாதத்துக்கு மேல் குட்டிகளுக்கு ஒரு நாளைக்கு 5 கிலோ பசுந்தீவனமும், அரை கிலோ அடர் தீவனமும் கொடுக்கலாம்.

அதற்கு மேல் வளர்ந்த ஆடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 5 கிலோ பசுந்தீவனம் மற்றும் அரை கிலோ அடர் தீவனம் கொடுக்கலாம்.

மேலும் அதனுடன் ஒரு கிலோ அளவுக்கு கடலைக்கொடி, சோளத்தட்டை போன்ற உலர் தீவனத்தையும் சேர்த்துக் கொடுக்கலாம்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.