சுவையான கோதுமை கச்சோரி !!

SAMAYAL
சுவையான கோதுமை கச்சோரி !!
தினமும் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் நம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இப்போது உடலுக்கு ஆரோக்கியம் தரும் கோதுமை கச்சோரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :
கோதுமை மாவு – 2 கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்
உளுந்து – ஒரு டீஸ்பூன்
கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 6
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு


செய்முறை :

🍔 முதலில் கோதுமை மாவுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்துகொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகாய் வற்றல், உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்துதெடுத்து வைத்துக்கொள்ளவும்.

🍔 பின் தேங்காய்த் துருவல் போட்டுப் பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும். பின் வறுத்தப் பொருள்கள் ஆறியதும் அதனுடன் சிறிதளவு உப்பு கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

🍔 பிறகு பிசைந்து வைத்திருக்கும் கோதுமை மாவில் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சின்ன சப்பாத்தியாக தேய்த்து வைத்துக் கொள்ளவும். பின் அதனுடன் ஒரு டீஸ்பூன் தேங்காய் கலவையை வைத்து மூடி நன்றாக தேய்த்துக் கொள்ளவும்.

🍔 கடைசியாக வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியைப் போட்டு இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுத்தால், சுவையான கோதுமை கச்சோரி தயார்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.