கார கோதுமை ரொட்டி !!

SAMAYAL
கார கோதுமை ரொட்டி !!
குழந்தைகளுக்கு வித்தியாசமான சுவையுடைய ரொட்டியை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த கார ரொட்டியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :
கோதுமை மாவு – 2 கப்
சின்ன வெங்காயம் – 1 கப்
பச்சை மிளகாய் – 4
மிளகாய் தூள் – 5 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
ஓமம் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு


செய்முறை :

🌿 முதலில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

🍪 பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளவும். பின் அதில் சிறிதளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பிசைந்த வைத்த மாவை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

🍪 பின் அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், ஓமம், தனியா தூள், மிளகாய் தூள், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். மாவுக்கலவை அதிகம் இறுக்கமாக இல்லாமல் நடுத்தரமாக இருக்க வேண்டும். பின் மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைத்துக் கொள்ளவும்.

🍪 கடைசியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் விட்டு முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சூப்பரான கார கோதுமை ரொட்டி தயார்!!!.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.