இலைமடக்குப்புழு மேலாண்மை முறைகள்..!

VIVASAYAM
இலைமடக்குப்புழு மேலாண்மை முறைகள்..!

⏩ நெற்பயிரில் இலைமடக்குப்புழு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இப்புழுக்கள் மழைக்குப் பிறகு, தழைச்சத்து உரங்களை அதிகமாக இட்டாலும் தோன்றும். நிழலான பகுதிகளில் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது.

⏩ தாய் அந்துப்பூச்சிகள் இடுகின்ற முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலைகள் நீளவாக்கில் மடித்து பச்சையத்தை சுரண்டி உண்ணும். இதனால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்து விடும்.

அறிகுறி :

⏩ தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும். மேலும், பயிரின் ஒளிச்சேர்க்கை குறைந்து வளர்ச்சி குன்றி காணப்படும். இலைகள் நீளவாக்கில் சுருட்டி, புழுக்கள் அதனுள்ளே தங்கி விடும்.

உரம் :

⏩ முறையான பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே உரமிட வேண்டும்.

⏩ இலைமடக்கு புழுவின் அந்துப்பூச்சிகள் இரவு நேரத்தில் வெளிச்சத்திற்கு ஈர்க்கப்படுகிறது. எனவே முன்னிரவு நேரங்களில் விளக்கு பொறிகள் கவரப்படுகின்ற தாய்ப்பூச்சிகளை அழிக்கலாம்.

⏩ தேவைக்கேற்ப தழைச்சத்து இடவேண்டும். இதன் தாக்குதல் அதிகமாக உள்ள இடங்களில் ரசாயன உரங்களை தவிர்த்தால் இதன் சேதத்தை குறைக்கலாம்.

⏩ தழைச்சத்தின் தேவையினை தொழு உரம் அல்லது பசுந்தாள் உரம் பூர்த்தி செய்யும். இதை இடுவதன் மூலம் இப்பூச்சியின் பெருக்கம் தவிர்க்கப்படுகிறது.

⏩ முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மாவை ஒரு எக்டருக்கு 5 சிசி என்ற அளவில் பயிர் நடவு செய்த 31, 44 மற்றும் 51 நாட்களில் மொத்தம் 3 முறை விடவேண்டும்.

⏩ வேப்பங்கொட்டை சாறு கரைசல் அல்லது வேப்ப எண்ணெய் ஆகியவற்றை தெளிக்க வேண்டும்.

⏩ எனவே விவசாயிகள் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை கடைபிடித்து இலைமடக்குப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தி அதிக மகசூலை பெறலாம்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.