சத்தான சுரைக்காய் அடை !!

SAMAYAL
சத்தான சுரைக்காய் அடை !!
அடை செய்வதில் காய்கறிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் அடை வகைகள் நிறைய உள்ளன. அவற்றில் சுரைக்காயைப் பயன்படுத்தி சுவையான சுரைக்காய் அடையை வீட்டில் சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :
சுரைக்காய் – 2
இட்லி அரிசி – 500 கிராம்
துவரம் பருப்பு – 100 கிராம்
உளுந்து – 100 கிராம்
கடலைப் பருப்பு – 150 கிராம்
காய்ந்த மிளகாய் – 20
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
தேங்காய் – 1 மூடி (துருவியது)
மிளகு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 2 கப்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்து – அரை டீஸ்பூன்


செய்முறை :

🍔 முதலில் இட்லி அரிசி, துவரம் பருப்பு மற்றும் உளுந்தை 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு சின்ன வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

🍔 பின் சுரைக்காயைச் சிறிய துண்டுகளாக நறுக்கி அதனுடன் மிளகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், அரிசி, பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

🍔 பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். பின் நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் அதில் துருவிய தேங்காய், நறுக்கிய கறிவேப்பிலை போட்டு மாவுடன் கலந்து கரைத்து வைக்க வேண்டும்.

🍔 பிறகு மாவில் சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். கடைசியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மாவை அடையாக ஊற்றி எண்ணெய் விட்டு முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சத்தான சுரைக்காய் அடை தயார்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.