மரம் ஏறும் கருவி…!

VIVASAYAM
மரம் ஏறும் கருவி…!

⏩ மரம் ஏறுபவர்களெல்லம் விவசாயிகளல்ல எல்லா விவசாயிகளுக்கு மரம் ஏறத் தெரிந்திருக்க வாய்ப்புகளில்லை. அப்படியே விவசாயிகளுக்குத் தெரிந்தாலும் தோப்புகளிலுள்ள அனைத்துத் தென்னை, பாக்கு மற்றும் பனை மரங்களில் அறுவடை செய்வது சாத்தியமா?

⏩ மரம் ஏறுவதற்கு ஆட்கள் இல்லை மேலும் மரம் ஏறுவதற்கு ஆட்கள் கிடைத்தாலும் அவர்கள் சொல்வது தான் கூலி. இது போன்ற பல இன்னல்களைச் சந்தித்து வரும் விவசயிகளை ஊக்கம் பெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே தான் மரம் ஏறும் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

⏩ இந்த கருவி தேங்காய்களைப் பறிப்பதற்கும். மரத்தை சுத்தம் செய்தல் மற்றும் இதர பணிகளுக்கும் உகந்தது. பெண்கள் உட்பட யார் வேண்டுமானாலும் இக்கருவியைக் கொண்டு மரத்தில் ஏறலாம்.

⏩ 30 முதல் 40 அடி வரை உயரமுள்ள தென்னை மரத்தில் ஏற சுமார் 1.5 நிமிடங்கள் ஆகும். நாளொன்றுக்கு 50 முதல் 60 மரங்கள் வரை ஏறலாம். ஒரு மரத்திற்கு ரூ.1.50 செலவு மட்டுமே.

விபரம் :

⏩ தென்னை மரம் ஏறும் கருவியின் எடை 10.5 கிலோ. 85 கிலோ வரை எடையுள்ள நபர் பயன்படுத்தலாம். கை மற்றும் கால்களால் இயங்கக் கூடியது (Manual Operation).

⏩ பனை மரம் ஏறும் கருவியின் எடை 12 கிலோ.

⏩ பாக்கு மரம் ஏறும் கருவியின் எடை - 8 கிலோ. 75 கிலோ வரை எடையுள்ள நபர் பயன்படுத்தலாம். கை மற்றும் கால்களால் இயங்கக் கூடியது (Manual Operation).

⏩ தென்னை மரம் ஏறும் கருவியின் விலை ரூ.7,300.

⏩ பாக்கு மரம் ஏறும் கருவியின் விலை ரூ.6,500.

⏩ பனை மரம் ஏறும் கருவியின் விலை ரூ.7,700.

⏩ தமிழக அரசு இந்த கருவியை வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் அளித்துள்ளது. இதை (National Agricultural Development Programme) திட்டம் மூலமாக விவசாயிகள் பயன்பெறலாம்.

⏩ இதற்கு விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல், கிராம நிர்வாகியிடம் இருந்து சான்றிதழ் வாங்கி விவசாயப் பொறியியல் கல்லூரியில் கொடுத்து பயன்பெறலாம். இல்லையேனில் முழு விலை கொடுத்தும் வாங்கலாம்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.