சோற்றுக்கற்றாழை…!

VIVASAYAM




சோற்றுக்கற்றாழை…!

⏩ சோற்றுக்கற்றாழை தரிசு நிலத்தில் வளரக்கூடிய பயிர் ஆகும். மழை குறைவான பகுதியில் விவசாயம் சரியான முறையில் நடைபெற முடியாத நிலையில் மூலிகை பயிரான சோற்றுக்கற்றாழை பயிரிடலாம்.

மருத்துவ குணம் :

⏩ ஆஸ்துமா, குடல் புண், உடல் உஷ;ணம் போன்ற நோய்களுக்கு கற்றாழை ஒரு நல்ல மருந்தாகும். இதன் தோல்பகுதியை சீவிவிட்டு உள்ளே இருக்கும் சதைப்பகுதியை, மோர், பாலில் கலந்து குடித்து வந்தால் நோய்கள் குணமாகும். இது ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் மருந்து பொருளாக பயன்படுகிறது.

⏩ இதுதவிர மூலிகை சோப்பு, ஷhம்பு, மருந்து, மாத்திரைகள் தயாரிக்க மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. இதனால் வெளிமாநிலங்களுக்கு பெருமளவில் இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வாழை சாகுபடியில் பக்க வாழையை எடுத்து நடுவது போன்றே சோற்றுக்கற்றாழையை பயிரிட வேண்டும்.

விற்பனை :

⏩ 3 அடிக்கு 1 என்ற விகிதத்தில் சோற்றுக்கற்றாழையை நடலாம். 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். இடைவெளி விட்டு பயிர் செய்திருப்பதால் நீரை எடுத்துச்சென்று கூட உற்றலாம். சொட்டுநீர் பாசனம் இந்த பயிருக்கு உகந்ததாகும்.

⏩ சோற்றுக்கற்றாழை செழித்து வளர்ந்தால் கீற்றுகள் ஒவ்வொன்றும் 300 கிராம் முதல் 1 கிலோ எடை வரை பருமனாக இருக்கும். 1 கிலோ எடையுள்ள கீற்று ரூ.4 முதல் ரூ.5 வரை விற்பனையாகிறது.

வெயிலுக்கு ஏற்றது :

⏩ களைகள் அதிகம் தேங்கவிடாமல் பார்த்துக் கொண்டால் உரம் இட தேவையில்லை. ஓரளவு சாண உரம் இட்டால் போதும். ஒரு முறை சோற்றுக்கற்றாழை நட்டால் ஓராண்டுக்கு பலன் கொடுக்கும். 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை அதன் கீற்றுகளை மட்டும் அறுவடை செய்யலாம்.

⏩ இது வெயில் காலத்துக்கு ஏற்ற பயிராகும். மருத்துவக்குணம் மிக்க சோற்றுக்கற்றாழைக்கு பூச்சி மருந்து அடிக்கத்தேவையில்லை. தண்ணீர் வசதியில்லாத கரடுமுரடான இடங்கள், பாறைகள் சூழ்ந்துள்ள இடங்கள், சுண்ணாம்பு பாறைகள் சூழ்ந்துள்ள பகுதிகளில் கூட சோற்றுக்கற்றாழை நன்றாக வளரும்.

⏩ இந்த சோற்றுக்கற்றாழை விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிகலாபம் கொடுக்கும் பயிராக உள்ளது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.