தித்திக்கும் பலாச்சுளை இலை அடை !!

SAMAYAL




பலாச்சுளை இலை அடை !!
அனைவருக்கும் பலாப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். இப்போது இந்த பலாப்பழம் மற்றும் வாழை இலையை வைத்து சூப்பரான இலை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :
பலாச்சுளைகள் – 25
வெல்லம் – 2 கப்
அரிசி மாவு – 2 கப்
தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – 2 டீஸ்பூன்
வாழை இலை – 8
நெய் – 150 மில்லி


செய்முறை :

🍲 முதலில் பலாச்சுளையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள பலாச்சுளைகளை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

🍲 பின்னர் பலாச்சுளை நன்றாக வதங்கியதும், அதில் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு இதனுடன் ஏலக்காய்த்தூள், அரிசி மாவு சேர்த்துக் கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.

🍲 பிறகு வாழை இலையில் நெய் தடவி, பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறு உருண்டை எடுத்து தட்டி, மேலே தேங்காய்த் துருவல் தூவி, மூடி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்க வேண்டும். பின் செய்து வைத்த இலை அடையை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்தால், தித்திக்கும் பலாச்சுளை இலை அடை தயார்!!!

குறிப்பு: பரிமாறும் வரை அடை, இலையுடனேயே இருக்க வேண்டும்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.