சூப்பரான பிரெட் மஞ்சூரியன் !!

SAMAYAL




பிரெட் மஞ்சூரியன் !!
பன்னீர், சிக்கனில் மஞ்சூரியன் சாப்பிட்டு இருப்பீங்க. பிரெட்டில் செய்யும் இந்த மஞ்சூரியன் சூப்பராக இருக்கும். இப்போது இந்த பிரெட் மஞ்சூரியன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :
பிரெட் துண்டுகள் – 10
தக்காளி – 3
வெங்காயம் – 4
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் – 4
குடை மிளகாய் – 2
வெங்காயத்தாள் – சிறிதளவு
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
மைதா – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
சோயா சாஸ் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு


செய்முறை :

🍪 முதலில் சோள மாவு, மைதா மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ள வேண்டும். பின் பிரெட் துண்டுகளைச் சிறிதாக வெட்டி, மாவில் நனைத்து, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்துக்கொள்ள வேண்டும்.

🍪 பிறகு தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும். பின் வெங்காயத்தாள் மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். குடைமிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

🍪 பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

🍪 பின்பு வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி சாறு ஊற்றி சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சோயா சாஸ் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். இந்தக் கலவை நன்றாக வெந்ததும் பொரித்த பிரெட் துண்டுகளைப் போட்டுக் கிளற வேண்டும். கடைசியாக கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் தூவி இறக்கி பரிமாறினால், சுவையான பிரெட் மஞ்சூரியன் தயார்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.