சன்டே ஸ்பெஷல் இறால் பக்கோடா !!

SAMAYAL
இறால் பக்கோடா!!
சன்டே என்றால் வீட்டில் ஓய்வு எடுக்கலாம் என்று தான் தோன்றும் என்பார்கள். அப்புறம் வீட்டில் மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவை செய்ய சொல்வார்கள். அவர்களுக்கு வித்தியாசமாக ஒரு உணவை செய்ய வேண்டுமா? இதோ உங்களுக்கான சுவையான இறால் பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :
இறால் – 500 கிராம்
தக்காளி – 3
வெங்காயம் – 3
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
சோம்பு தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
பஜ்ஜி மாவு – 2 கப்
அரிசி மாவு – 5 ஸ்பூன்


செய்முறை :

🍤 முதலில் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லித்தழைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவு, அரிசி மாவு, சிறிதளவு உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

🍤 பிறகு இறாலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு தூள் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.

🍤 பின்னர் வெங்காயம் நன்றாக வதங்கியதும், தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்றாக வதங்கியதும் கரம் மசாலாத்தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் இறால், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

🍤 கடைசியாக இறால் நன்றாக வெந்ததும் அதில் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி அதை பஜ்ஜி மாவில் போட்டு நன்றாக கலக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி எடுத்து சிறிது சிறிதாக ஊற்ற வேண்டும். வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால், சூப்பரான இறால் பக்கோடா தயார்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.