சத்தான மிக்ஸ்டு கீரை புலாவ் !!

SAMAYAL
மிக்ஸ்டு கீரை புலாவ் !!
கீரையில் அதிகளவு இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. கீரை பிடிக்காதவர்களுக்கு இப்போது இந்த மிக்ஸ்டு கீரை புலாவ் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையானப் பொருட்கள் :
பாசுமதி அரிசி – 500 கிராம்
புதினா – ஒரு கைப்பிடி அளவு
அரைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு
பொன்னாங்கண்ணிக்கீரை – ஒரு கைப்பிடி அளவு
வல்லாரைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு
வெங்காயம் – 2 கப் (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலாத்தூள் – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கியது)
உலர்திராட்சை – 10
முந்திரிப்பருப்பு – 10
பிஸ்தா பருப்பு – 10
நெய் – 100 மில்லி
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு


செய்முறை :

🌿 முதலில் பாசுமதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும் பின் ஊற வைத்த அரிசியில் ஒரு பங்கு அரிசிக்கு இருமடங்கு என்ற அளவில் தண்ணீர் ஊற்றி, குக்கரில் வேக வைத்து 3 விசில் வந்ததும் இறக்கிக் கொள்ளவும்.

🌿 பின் புதினா, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, வல்லாரைக்கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு திராட்சை, முந்திரி, பிஸ்தாவை நெய்யில் தனித்தனியாக வறுக்கவும்.

🌿 பின்னர் ஒரு வாணலியில் நெய் விட்டு புதினா, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, வல்லாரைக்கீரை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கரம் மசாலாத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

🌿 பிறகு சாதத்தை அகலமான பாத்திரத்தில் போட்டு வதக்கிய கீரை கலவை மற்றும் திராட்சை, முந்திரி, பிஸ்தா சேர்த்து நன்கு கிளறி பரிமாறினால், சத்து நிறைந்த மிக்ஸ்டு கீரை புலாவ் தயார்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.