ருசியான பன்னீர் பாலக் பரோட்டா!!

SAMAYAL





பன்னீர் பாலக் பரோட்டா !!
குழந்தைகளுக்கு காலை வேளையில் சத்தான உணவு செய்து கொடுக்க விரும்பினால் இந்த பன்னீர் பாலக் பரோட்டா செய்து கொடுக்கலாம். இப்போது இந்த பன்னீர் பாலக் பரோட்டா செய்முறையை பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :
கோதுமை மாவு – 3 கப்
உப்பு – தேவையான அளவு
பாலக்கீரை – 2 கட்டு
அரைத்த பச்சைமிளகாய் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

ஸ்டஃப்பிங்க்கு :

துருவிய பன்னீர் – 1 கப்
நறுக்கிய பச்சைமிளகாய் – 4
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு


செய்முறை :

🍛 முதலில் பாலக்கீரையை வேகவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் கோதுமை மாவு, உப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள், அரைத்த பச்சைமிளகாய், தேவையான எண்ணெய் சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் மாவை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

🍛 பின்னர் கொத்தமல்லித்தழை, பன்னீர், நறுக்கிய பச்சைமிளகாய், சிறிதளவு உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

🍛 பிறகு ஊறிய மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி அளவிற்கு தேய்த்து பன்னீர் கலவையை வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக தேய்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

🍛 கடைசியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்துள்ள பாலக் பன்னீர் பரோட்டாவை போட்டு, எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறினால், சத்தான பாலக் பன்னீர் பரோட்டா தயார்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.