ருசியான தயிர் ஆலு மசால் !!

SAMAYAL

தயிர் ஆலு மசால்!!

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக் கொள்ள தயிர் ஆலு மசால் மிகவும் சுவையாக இருக்கும். இப்போது இந்த தயிர் ஆலு மசாலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :
கெட்டியான தயிர் – 300 மி.லி.
உருளைக்கிழங்கு – 1 கிலோ
வெங்காயம் – 4
கொத்தமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
தக்காளி – 4
மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
தனியாத்தூள் – 3 டீஸ்பூன்
கரம்மசாலாத்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு


செய்முறை :

🍠 முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

🍠 பின்னர் ஒரு வாணலியில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கிக் கொள்ளவும். பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்.

🍠 கடைசியாக அதில் கரம்மசாலாத்தூள், தனியாத்தூள், உருளைக்கிழங்கு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வதக்கவும். 10 நிமிடம் கழித்து கெட்டியான தயிர், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி இறக்கினால், சூப்பரான தயிர் ஆலு மசால் தயார்!!! இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடலாம்.

குறிப்பு: தயிரை ஒரு துணியில் கட்டி தொங்கவிட்டால், அதில் இருக்கும் தண்ணீர் எல்லாம் வடிந்து கெட்டியான தயிர் கிடைக்கும்.