சண்டே ஸ்பெஷல் நண்டு பொடிமாஸ்!!

SAMAYAL

நண்டு பொடிமாஸ்!!


சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள நண்டு பொடிமாஸ் சூப்பராக இருக்கும். இப்போது இந்த நண்டு பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :
பெரிய நண்டு – 1 கிலோ
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
தட்டிய பூண்டு – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 3
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
சோம்பு, சீரகத்தூள் – தலா 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
எலுமிச்சைச் சாறு – சிறிதளவு
தேங்காய் துருவல் – 4 ஸ்பூன்


செய்முறை :

🐟 முதலில் நண்டை சிறிது மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

🐟 பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் அதில் மிளகாய்த்தூள், சோம்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். நன்கு மசாலா வாசனைப் போகுமாறு கிளற வேண்டும்.

🐟 பிறகு அதனுடன் வேக வைத்து உதிர்த்த நண்டு சதை மற்றும் தேவையான உப்பு போட்டு நன்றாக கிளறி 10 நிமிடம் வேக விட வேண்டும். கடைசியாக கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, எலுமிச்சைச் சாறு சேர்த்து ஒரு முறை கிளறி இறக்கினால், சூப்பரான நண்டு பொடிமாஸ் தயார்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.