சத்தான கத்திரிக்காய் மொச்சைக் குழம்பு !!

SAMAYAL

கத்திரிக்காய் மொச்சைக் குழம்பு!!
மொச்சை மற்றும் கத்திரிக்காய் சேர்த்து குழம்பு செய்தால் மிக சுவையாக இருக்கும். இப்போது இந்த கத்திரிக்காய் மொச்சைக் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :
கத்திரிக்காய் – 6
மொச்சை – 150 கிராம்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
சீரகம் – 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
உளுந்து – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 2 டீஸ்பூன்
சின்னவெங்காயம் – 25
தக்காளி – 3
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
தேங்காய் – 1 மூடி
புளி – பெரிய எலுமிச்சைப்பழ அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பூண்டு – 15
காய்ந்த மிளகாய் – 4
கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
தண்ணீர் – தேவையான அளவு


செய்முறை :

🍆 முதலில் கத்திரிக்காய், கொத்தமல்லித்தழை, தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவிக் கொள்ளவும். பிறகு புளியை தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

🍆 பின் மொச்சையை முந்தைய நாள் இரவே 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஊறிய மொச்சையை குக்கரில் போட்டு வேகவைத்துக் கொள்ளவும்.

🍆 பின்னர் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, பூண்டு, பாதி சின்னவெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், துருவிய தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

🍆 பின்பு வதக்கிய கலவையை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, கறிவேப்பிலை, மீதியுள்ள சின்னவெங்காயம், கத்திரிக்காய், வேக வைத்த மொச்சை சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.

🍆 கடைசியாக மொச்சையும், கத்திரிக்காயும் வெந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவயைச் சேர்த்துக் கொதிக்க விடவும். பின்பு புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இதில் உப்பு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறினால், சத்தான கத்திரிக்காய் மொச்சைக் குழம்பு தயார்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.