சிவப்பு அவல் இலை அடை!!

SAMAYAL

சிவப்பு அவல் இலை அடை!!

மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சூப்பரான உணவு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த சத்து நிறைந்த சிவப்பு அவல் இலை அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :
கோதுமை மாவு – 2 கப்
சிவப்பு அவல் – 1 கப்
தேங்காய்த்துருவல் – 1 கப்
வெல்லம் – 2 கப்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
வாழை இலை – 2


செய்முறை :

🍳 முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் பிசைந்து வைத்துள்ள மாவைச் சிறிய வட்டமாகத் தட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு வெல்லத்தை பாகு போல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.

🍳 பின்னர் சிவப்பு அவலை அரை மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். பின் ஊற வைத்த சிவப்பு அவலுடன், வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் ஆகியவற்றைக் கலந்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

🍳 கடைசியாக இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து வாழை இலையில், பிசைந்து வைத்துள்ள சப்பாத்தி மாவின் நடுவில் சிவப்பு அவல் கலவை வைத்து, இலையை இரண்டாக மடித்து அடையாக வேகவைத்து இறக்கினால், சத்தான சிவப்பு அவல் இலை அடை தயார்!!!

🍳 இந்த சிவப்பு அவலில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. இது இரத்தச்சோகை உள்ளவர்கள், ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகள், வயதானவர்கள் என எல்லோருக்கும் ஏற்ற உணவு.