வித்தியாசமான பகாரா பைங்கன் !!

SAMAYAL

வித்தியாசமான பகாரா பைங்கன் !!

கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட கத்திரிக்காயை வைத்து பகாரா பைங்கன் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த பகாரா பைங்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :
சின்ன கத்திரிக்காய் – அரை கிலோ
வெங்காயம் – 4
கடுகு – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
புளித்தண்ணீர் – 2 கப்
பொடித்த வெல்லம் – 1 கப்
துருவிய தேங்காய் – ஒரு கப்
வறுத்த வேர்க்கடலை – ஒரு கப்
கறுப்பு எள் – 50 கிராம்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு


செய்முறை :

🍆 முதலில் வெங்காயம், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் கத்திரிக்காயை பாதியாக வெட்டி தண்ணீரில் போட வேண்டும்.

🍆 பின்பு வேர்க்கடலை, தேங்காய், எள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

🍆 பின்னர் அதனுடன் கத்திரிக்காயையும் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளற வேண்டும். பின் அதில் சிறிதளவு உப்பு, புளித்தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.

🍆 கடைசியாக, வெல்லம் சேர்த்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்துக் கிளற வேண்டும். பின் கெட்டியானதும் மேலே கொத்தமல்லித்தழை தூவி, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், ருசியான பகாரா பைங்கன் தயார்!!!. இந்த கிரேவி பிரியாணி, புலாவ் மற்றும் சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட சிறந்தது.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.